2443.
|
ஈர
வார்சடை தன்மேல்
இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமு மேத்தாச்
சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி
வருபுன னிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே. 2 |
கு-ரை:
இத்திருப்பதிகம் முத்துச் சிவிகையில் ஏறுவதன் முன்னர்,
திருவருட் சிறப்புணர்த்தப் பாடியருளியது. அப்பொழுது ஆங்கு இருந்த
அன்பர் அனைவர்க்கும் ஆண்டவன் திருவருளைப் பெறுவதற்கு வேண்டும்
வழிபாட்டை வற்புறுத்துவதை ஒவ்வொரு பாடலிலும் உணரலாம். எட்டாவது
திருப்பாட்டில் அருளைச் செயப்படுபொருளாகக் கொள்ளல்வேண்டும்.
ஏனைய ஒன்பது பாக்களிலும் அருள் எழுவாயாக நிற்றலறிக.
ஈற்றுப்பாட்டில், அருளைச்சொன்ன பாடல் என்றதுணர்க.
எந்தை, ஈசன்,
எம் பெருமான், ஏறமர்கடவுள் (தி.2 ப.92 பா.5)
என்று எடுத்து வாக்கால் ஓதி மனத்தால் சிந்தித்து, (காயத்தால் வழிபாடு)
செய்பவர்க்கே அடிகள் திருவருள் கைகூடுவது, சென்று-மலவழி மலநடை
கொள்ளாது நீக்கி அருள் வழியில் அருணடை கொண்டு நிவா:-
ஆற்றின்பெயர். அரத்துறை:- அறத்துறை என்பதன் மரூஉ. அரன் துறை
என்பது சிறவாது. றகரம் ரகரமாக ஒலித்தல் பல சொற்களிற் காணலாம்.
2.
பொ-ரை: சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும்
நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த
நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள், குளிர்ந்த
நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி
அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது
பெறுதற்கு இயலாதது.
கு-ரை:
ஈரம் - குளிர்ச்சி, குளிருஞ்சடை (தி.2 ப.62 பா.6.)
குளிர்ந்தார் சடையன் (தி.1 ப.134. பா.3) சிதடர்-குருடர், பேதையர்.
|