|
முறைமை
யாற்சொன்ன பாடல்
மொழியும்
மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லைப்
பாட்டிவை
பத்தும்வல் லார்க்கே. 11
|
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
பொழில் (சோலை), மரச்செறிவால் கதிரொலி புகப்பெறாது,
இருண்டு கிடக்கும் நிலைபற்றிக் கறுப்பு நிறம் உரித்தாயிற்று. நிழல்
என்பதற்கு ஒளி என்பது பொருளாதலின், பொழிலின் நிழல் காரொளியுடையதாதல் வேண்டும்.
அவ்வாறின்றி, உட்புக இயலாமல்,
தாவரச்செறிவு கறுத்த நிழலைச் செய்திருக்கின்றது என்றவாறு. மாந்தராகிய
வல்லார்க்கு அவர் தம் வினைபோய்ப் பறையும். அதற்கு ஐயம் இல்லை.
பறைதல்-அழிதல். வினை பறைவதில் வல்லார்க்கும் ஐயம் இல்லை
எனலுமாம். மொழிவதும் வன்மையுறுவதும் ஒன்றாகா. இத்திருப்பதிகத்துள்,
திருவருளைக் கூடவேண்டின் சிவநாமங்களை எடுத்தோதியும் அவன் சீரும்
செல்வமும் சொல்லிப் போற்றியும், உருகிப்பரவி நைந்தும், பேணிப் பணிகள்
செய்தும் வழிபடுவது இன்றியமையாதது என்பது உணர்த்தப்பட்டது.
திருஞானசம்பந்தர்
புராணம்
எந்தை
ஈசன் எனஎடுத்(து) இவ்வருள்
வந்த வாறுமற் றெவ்வண மோ? என்று
சிந்தை செய்யுந் திருப்பதி கத்திசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்(று)
ஆதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி ஏறினார் உய்ய உலகெலாம்.
-சேக்கிழார்.
|
|