பாறையின்மீது
அழகாகக் கட்டப்பெற்ற கோயிலை உடைய ஊர்
என்று பொருள்படும். இவ்வூர்ப் பெயரை, பாண்டவர் வனவாச காலத்தில்
தாம்கண்ட ஐந்து அறைகள் அந்த நல்லூர்க்கு அலங்காரஞ்செய்யும்
காரணத்தால் எய்தியது என்றும் கூறுவர்.
இறைவரின்
திருப்பெயர் அறையணிநாதேசுவரர். இறைவியாரின்
திருப்பெயர் அருள்நாயகி. பாறையில் பல்லவர் குடை மண்டபம் இருக்கிறது.
வழி சரியாக இல்லை. முருகன் கோயில் திரௌபதியம்மன் கோயிலாக
மாற்றப்பெற்றதாகலாம். கங்கையம்மன் கோயில் ஒன்று புதிதாகக்
கட்டியிருக்கிறார்கள்.
தீர்த்தம்
பெண்ணையாறு.
பிரசண்ட
முனிவர் பூசித்துப் பேறுபெற்றார். இது திருஞான சம்பந்தரது
ஒரே பதிகத்தைப் பெற்றது.
கல்வெட்டு:
இத்திருக்கோயிலில்,
பிற்காலச்சோழ மன்னர்களில் முதலாம்
இராஜராஜசோழன், முதற் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம்
குலோத்துங்கன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன்,
மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திர சோழன் இவர்கள்
காலங்களிலும் பிற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் திருபுவனச்
சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், மாறவர்மன், திருபுவனச் சக்கரவர்த்தி
விக்கிரமபாண்டியன் இவர்கள் காலங்களிலும், பல்லவர்களுள்
கோப்பெருஞ்சிங்கன் காலத்திலும்; விஜயநகர அரசர்களில் சதாசிவ
மகாராயர், கிருஷ்ண தேவ மகாராயர், கம்பப்பண்ண உடையார் இவர்கள்
காலங்களிலும், சம்புவராயருள் சகலலோக சக்கரவர்த்தி இராசநாராயண
சம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்றுள்ள 96 கல்வெட்டுக்கள்
இருக்கின்றன.1
வீரமே
துணையாக என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய
இராஜகேசரி வர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ
தேவரின் 46 ஆவது ஆட்சியாண்டில் கீழையூர் மலையமான் நானூற்றுவன்
மலையமானாகிய இராஜேந்திரசோழ சேதுராயன்,
1See
the Annual Reports on South Indian Epigraphy for the
year 1902 No. 386-391, year 1905 No. 26, Year 1935 No. 111-195; (South
Arcot District, Tirukoviloor Taluk)
|