3675. |
தென்றிசையி
லங்கையரை யன்றிசைகள் |
|
வீரம்விளை
வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும்
வித்தகனி டஞ்சீர்
ஒன்றிசையி யற்கிளவி பாடமயி
லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுர
றோணிபுர மாமே. 8 |
வினைகளுக்குள் வலிமைபொருந்திய
- மிக வலிய எனினும் ஆம்.) சரியைத்
தொழிலர் - சரியையாதி பணிபுரிவோர். சரியை உபலக்கணம். "இருவரும்
உணரா அண்ணல்... உரத்தில் சீர்கொள் கரதலம் ஒன்று சேர்த்தி மோனமுத்
திரையைக் காட்டி." (கந்தபுராணம் மேருப்படலம். பா.12) துண் என விரும்பு
- (எங்குக் குற்றம் நேர்ந்து விடுகிறதோ என்று) அச்சத்தோடு விரும்பும்,
தொழிலர் - பணியை மேற்கொண்டவர்கள் தங்கும் திருத்தோணிபுரம்.
8.
பொ-ரை: தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான
இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை
நிலைநாட்டி, வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும்
புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இசையுடன்
குயில்கள் பாட, மயில்கள் ஆட, வளம் பொருந்திய சோலைகளின்
மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு, வண்டுகளும், மிகுந்த
தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும்.
கு-ரை:
இலங்கையரையன். திசைகள் - எட்டுத் திசைகளிலும். வீரம்
விளைவித்து - தனது வீரத்தை நிலைநாட்டி (திக்கு விசயம் செய்து) வென்று
- வெற்றிகொண்டு. இசை - இசைந்த (ஒன்றையொன்று ஒத்த) புயங்களை
அடர்த்து. அருளும் - அருள்புரிந்த வித்தகன் இடம். சீர் ஒன்று -
தாளவொத்துக்கு இசைந்த. இசை இயல் கிளவி - இசை பொருந்திய
பாடல்களை. பாட - குயில்கள் பாட. மயில் ஆட. வளர்சோலை. துன்றுசெய
- அவ்வாடலைக் காணும் சபையினர் போல நெருங்க. வண்டு-வண்டுகளும்.
மலி-மிகுந்த, தும்பி வண்டுகளும், முரல் - சுருதி கூட்டுவதைப்போல
ஒலிக்கின்ற தோணிபுரம். பாட என்பதற்கு எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது;
தோன்றா எழுவாய். அன்றி இசையியற் கிளவி - என்பதை அன்மொழித்
|