3676. |
நாற்றமிகு
மாமலரின் மேலயனு |
|
நாரணனு
நாடி
ஆற்றலத னான்மிகவ ளப்பரிய
வண்ணமெரி யாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகு
மோங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு
தோணிபுர மாமே. 9 |
3677. |
மூடுதுவ
ராடையினர் வேடநிலை |
|
காட்டுமம
ணாதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ
டுத்தடைவி னானக் |
தொகையாகக் கொண்டு
குயிலெனினும் ஆம். பன்மொழித்தொடர்:
இசையியன்ற குரலோசையுடையது என்று பொருள்.
9.
பொ-ரை: நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு
அரிதாகும் வண்ணம், நெருப்புப் பிழம்பாகி, கீழுலகு மேலுலகு ஆகியவற்றை
வியாபித்து ஓங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய்
ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடம் திருத்தோணிபுரம் ஆகும்.
கு-ரை:
நாடி - தேடத்தொடங்கி, ஆற்றல் அதனால் - தங்கள்
வலிமையினால். அளப்பு மிக அரிய வண்ணம் - சிறிதும்
அளத்தலரியதாகும்படி. எரி ஆகி - அக்கினிப் பிழம்பு ஆகி. ஊற்றம் -
உற்ற இடத்தையும். எழு - எழுந்த. தோற்றம் - தமது தோற்றத்தையும்.
நாளும் - இன்றும். அரியான் - அறிதல் அரியவனாகிய கடவுள். உறைவு -
வாழும் இடம் தோணிபுரம்.
10.
பொ-ரை: உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த
புத்தர்களும், தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல
தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை
விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர். அத்தீய மொழிகளை நீக்கி,
சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக்
|