|
காடுபதி
யாகநட மாடிமட
மாதொடிரு காதிற்
றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு
தோணிபுர மாமே. 10 |
3678. |
துஞ்சிருளி
னின்றுநட மாடிமிகு |
|
தோணிபுர
மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்
பந்தனசொல் மாலை
தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி
யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள்
பெற்றுவளர் வாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
கொண்டு, நடனமாடி,
உமாதேவியோடு கூடி,
இருகாதுகளிலும் முறையே தோடும், குழையும் அணிந்தவராகிய சிவ
பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும்.
கு-ரை:
மூடு துவராடையர் - துவர் ஆடை போர்ப்பவர்களாகிய
புத்தர். வேட நிலைகாட்டும் அமண் ஆதர் - தமது வேடமாகிய
ஆடையணியாத் தன்மையைப்போலவே தமது ஞானநிலையும் எனக்காட்டும்
சமணர்களாகிய அறிவிலிகள். அம்மொழி - அவர் மொழியை. கெடுத்து -
நீக்கி. அக்காடு - அத்தகைய மயானம். பதியாக - இருப்பிடமாகக்கொண்டு,
நடம் ஆடி. மடமாதோடு (கூடி) - அர்த்தநாரீசுர வடிவமாய்.
இருகாதில்-இருகாதுகளிலும். முறையே, தோடும், குழையும் பெய்தவர் -
அணிந்தவராகிய சிவபெருமானுக்கு. உறைவு - வசிக்கும் இடம்,
தோணிபுரமாம். அடைவினால்- முறைப்படி. அதைச் சேர்வீர்களாக என்பது
அவாய் நிலை. ஆடையர் ஆதர் கேடுபல சொல்லிடுவர் அம்மொழி
கெடுத்து அடைவினால் அதனைச் சேர்வீர்களாக என்க. அல்லது கெடுத்த
அடைவினான் எனப்பிரித்து அடைவினான் - சிவபெருமான் எனலும் ஆம்.
11.
பொ-ரை: அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும்
பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப், புகழ்மிகுந்த திருத்தோணிபுரத்தை
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித்
|