பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)83. திருநல்லூர்1025

83. திருநல்லூர்

பதிக வரலாறு:

     சிரபுரச் செம்மலார், மறைவல்லோர் எதிர்கொள்ளச் சென்று, பத்தரும் பரிசனங்களும் உடன் பரவக் கோபுரம் தொழுது பாடிய பரவுசொற்பதிகம்
இது.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்.341 பதிக எண்:83

 திருச்சிற்றம்பலம்

3690. வண்டிரிய விண்டமலர் மல்குசடை
       தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய
     தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை
     மேலருவி முத்தம்
தெண்டிரைகண் மோதவிரி போதுகம
     ழுந்திருந லூரே.                     1


     1. பொ-ரை: வண்டு அமர விரிந்த மலர்கள் நிறைந்த சடைதொங்கச்
சிவபெருமான் இடபவாகனத்திலேறி, பண்டைக்காலந்தொட்டே கையில்
நெருப்பேந்தியவனாய் விளங்கும் பதியாவது, பக்கத்தில் நண்டு ஓட, நாரை
தேட மலையிலிருந்து விழும் அருவி முத்துக்களை அடித்துக் கொண்டு வந்து
சேர்க்க, காவிரியின் தெள்ளிய அலைகள் மோதுவதால் அரும்புகள் மலர
நறுமணம் கமழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: (வண்டு இரிய) விண்ட - விரிந்த. (மலர்) மல்கு - நிறைந்த
சடை. தாழ - தொங்க. பண்டு - ஆதிகாலந் தொட்டே, எரியைக்
கைக்கொண்ட பரமன் பதி அது என்பர். அதன் - அப்பதியின். அயலே -
பக்கத்தில். (நண்டு) இரிய - ஓட. (நாரை இரை தேட). வரைமேல் அருவி
முத்தம் - சைய மலைமேல் அருவி அடித்து வரும் முத்தங்களை, காவிரிநதி
தெள்ளிய திரைகளால் வீச, அவை மோதுவதால் விரிந்த அரும்புகள் கமழுந்
திருநல்லூர்.