பக்கம் எண் :

1026திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3691. பல்வளரு நாகமரை யார்த்துவரை
       மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி
     ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட
     வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள
     ருந்திருந லூரே.                     2

3692. நீடுவரை மேருவில தாகநிகழ்
       நாகமழ லம்பால்
கூடலர்கண் மூவெயிலெ ரித்தகுழ
     கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுன னின்றுதிக
     ழுந்நிமல னிடமாம்
சேடுலவு தாமரைக ணீடுவய
     லார்திருந லூரே.                     3


     2. பொரை: நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி,
மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின்
இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி, அவற்றிற்கேற்ப
நடனமாடுவதும், வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி
வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வளர் இசை - இசைவளரும். சொல்...கிளவி - சொற்களாலாகிய
சாகித்தியங்களை (இதனை 'உரு' என்பர் இசைநூலார், இப்பொழுது 'உருப்படி'
எனக் குழுஉக் குறியாய் வழங்கி வருகிறது.) வளரும் - புகழ் வளரும்
திருநல்லூர்.

     3. பொ-ரை: பெரிய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும்
பாம்பை நாணாகவும், அக்கினியை அம்பாகவும் கொண்டு, பகைவர்களின்
மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின் சடைமேல்
இதழ்களையுடைய கொன்றையும், கங்கையும் விளங்குகின்றன. இயல்பாகவே
பாசங்களின் நீங்கியவனான அச்சிவபெருமான்