3697. |
ஏறுபுகழ்
பெற்றதெனி லங்கையவர் |
|
கோனையரு
வரையில்
சீறியவ னுக்கருளு மெங்கள்சிவ
லோகனிட மாகும்
கூறுமடி யார்களிசை பாடிவலம்
வந்தயரு மருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்த
ருந்திருந லூரே. 8 |
பூசியுள்ளவர். கங்கையையும்,
பாம்பையும், சந்திரனையும் சடை
முடியிலணிந்துள்ளவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும்
திருத்தலம் ஆகும்.
கு-ரை:
அங்கம் - எலும்பை. (உடல்மேல் அணிவர்) ஞாலம் -
பூமியிலுள்ளார். இடு(ம்) பிச்சைக்கு. தங்கு - பொருந்திய. அரவம் ஆக -
ஆரவாரத்தோடு. உழிதந்து - சுற்றித்திரிந்து. கங்கை. அரவம் (விரவு-)
திங்கள் - அணிந்த சடையையுடைய அடிகள். வதி - சேற்றில், செங்கயல்
குதிகொள்ளும். புனல்வளம் மிக்க திருநல்லூர்.
8.
பொ-ரை: மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான
இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர்
அவனுக்கு நீண்ட வாழ்நாளும், வெற்றிதரும் வீரவாளும் அளித்து
அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, அடியார்கள் இசைபாடி வலம் வரும்பொழுது,
பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர்
அருவியெனப் பாய்ந்து அருகிலுள்ள நிலவெடிப்புகளில் விழ, வெடிப்புக்கள்
நீங்கி நிலம் சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஏறுபுகழ் - மிக்க புகழ்பெற்ற. தென் இலங்கையர். கோனை
- அரசனை, சீறி -முதற்கண்கோபித்து, (பிழைக்கிரங்கி அவன்
வேண்ட)அவனுக்கு அருளும். அடியார்கள் இசைபாடி வலம் வருகையில்,
அயரும் -(அவர்கள் கண்களினின்றும்) சோரும். அருவி - ஆனந்தக்
கண்ணீரருவியானது (அருகிலுள்ள) நிலவெடிப்புக்கள் எல்லாம் அழியத்
திகழ்தரும் - விளங்கும் திருநல்லூர். மிகையுயர்வு நவிற்சியணி.
|