பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)83. திருநல்லூர்1029

  கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண்
     முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன
     லார்திருந லூரே.                    6

3696. பொங்கரவ ரங்குமுடன் மேலணிவர்
       ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து
     லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை
     யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல
     தார்திருந லூரே.                     7


அமர்ந்தவர். இவையே அவரது அடையாளமாகும். அத்தகையவர்
அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட
நடனம்புரிபவர். விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால்
உணர்ந்து போற்றப்படுபவர். பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்படி
சினந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த
திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: புற்றில் வாழும் பாம்பை அணிபவர், நெற்றிக் கண்ணோடு
ஒரு விடையை ஏறிச் செலுத்துபவர். அடையாளம் - (இவை அடையாளமாக.)
சுற்றம் - சுற்றமாக. இருள்பற்றிய - இருளில் விளக்கு ஏந்திய. பல்பூதம் -
பலபூதம் இசைபாட (உடையவர்). நசையால் - விருப்பத்தோடு. முனிவர்கள்.
மறைகற்று உணரப்படுபவர். பற்றலர்கள் - பகைவர்களின். எயில்முற்றும்
மாள -மதில் முழுதும் ஒழியும்படி. செற்றவர் - கோபித்தவர். நெருக்கு
புனல் ஆர் - மிகுந்த நீர்வளத்தையுடைய. சந்தம்நோக்கி. நெருங்கு என்பது
வலித்தல் விகாரம் பெற்றது. "பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்ற" என்ற
திருத்தாண்டகத்தின்படி இருள்பற்றிய என்பதற்குப் பொருள் கொள்க.

     7. பொ-ரை: இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை
அணிந்துள்ளவர். எலும்பையும் திருமேனியில் அணிந்தவர். பிரமகபால
மேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர்.
தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப்