3694.
|
பொடிகொடிரு
மார்பர்புரி நூலர்புனல் |
|
பொங்கரவு
தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத
லாளரவரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி
லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள்
சேர்திருந லூரே. 5 |
3695. |
புற்றரவர்
நெற்றியொர்க ணொற்றைவிடை |
|
யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை
பாடநசை யாலே |
5.
பொ-ரை: சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை
உடையவர். முப்புரிநூல் அணிந்தவர். கங்கையையும், பாம்பையும் தாங்கிய
தாழ்ந்த சடைமுடியுடையவர். இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும்
முதற்பொருளானவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இடி
போன்ற முழவோசை ஒலிக்க, தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன்
விழாக்கள் சிறந்து விளங்க, அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும்
வினைகள் அகல, இனிய மனமுடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
பொடிகொள் - திருநீறு பூசிய, திருமார்பர். புனல் - கங்கை.
முதல்ஆளர் - முதன்மையுடையவர். இடிகொள் - இடியோசையைக்்கொண்ட,
முழவு ஓசையுடன். எழில் ஆர் செய்தொழிலாளர் - விழாவிற்குரிய
சிறப்புக்களை அழகுபொருந்தச் செய்கின்ற தொழிலாளர்களால். விழா -
திருவிழா. மல்க - சிறக்க. செடிகொள் வினை அகல - அத்திருவிழாத்
தரிசன பலத்தால் துன்பத்தைத் தருகின்ற வினை அகலக் "கண்ணினால்
அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்" ஆதலினால் தரிசித்தோர் பெறும்
பலனைக் கூறியருளினர். மனம் இனியவர்கள். (தநுகரண புவன போகங்கள்
வினைக்கேற்ப அமைதலால்) மனம் முதலியன நல்லவனாகப் பெற்ற
புண்ணியம் உடையவர்கள்.
6.
பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர்,
நெற்றியில் ஒரு கண் உடையவர். இடப வாகனத்தில்
|