3714. |
மைத்தகு
மதர்விழி மலைமக ளுருவொரு |
|
பாகமா
வைத்தவர் மதகிரி யுரிவைசெய் தவர்தமை
மருவினார்
தெத்தென விசைமுரல் சரிதையர் திகழ்தரு
மரவினர்
வித்தக நகுதலை யுடையவ ரிடம்விழி
மிழலையே. 3 |
3715. |
செவ்வழ
லெனநனி பெருகிய வுருவினர் |
|
செறிதரு
கவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர்
தொழுவிலா
முவ்வழ னிசிசரர் விறலவை யழிதர
முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி
மிழலையே. 4 |
3.
பொ-ரை: மை பூசிய அழகிய விழிகளையுடைய உமாதேவியை,
சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர். மதம் பிடித்த
யானையின் தோலை உரித்தவர். தம்மை அடைந்தவர் தாளத்துடன்
இசைபாடுகின்ற புகழையுடையவர். பாம்பை அணிந்தவர். அதிசயமான
மண்டையோட்டைக் கொண்டவர். இத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
மைதரு - மையணிந்த. மதர் - மதர்த்த விழியையுடைய
(உமை உரு) ஒருபாகமா(க) வைத்தவர். உரிவை செய்தவர் - உரித்தவர்.
உரிவை - வை தொழிற் பெயர் விகுதி. தமை மருவினார் - தம்மை
அடைந்த அன்பர்கள். தெத்தென - தாளவொத்துக்களோடு. இசை முரல் -
இசைபாடுகின்ற. சரிதையர் - புகழை யுடையவர்.
4.
பொ-ரை: சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற
மேனியுடையவர். நெருப்புப் போன்று விடமுடைய, கவ்வும் தன்மையுடைய
பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர். சுடர் விடும் மழுப்
படை உடையவர். தம்மைத் தொழாத, பகைமையுடைய,
|