பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)85. திருவீழிமிழலை1047

3716. பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர்
       பலியெனா
எங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழு
     மியல்பினர்
அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழ
     வாரமா
வெங்கண வரவின ருறைதரு பதிவிழி
     மிழலையே.                         5


சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின்
மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர். அத்தகைய பெருமான்
வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: செவ் அழல் - செந்நெருப்பு. என - என்னும்படி. நனிபெருகிய
- மிகவும் பெருகிய, உருவினர். செறி - அரையில் கட்டிய. கவ்வு -
கவ்விக்கடிக்கும். அழல் - விடத்தையுடைய (அரவினர்) கதிர் முதிர் -
ஒளிமிக்க (மழுவினர்). அழல் நிசிசரர் - கோபத்தையுடைய அசுரர். அழல் -
கோபம், சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி" என வள்ளுவரும்
உருவகித்தார். (குறள். 306) (மூன்று + அழல் = முவ்வழல்) விறல் சுவை -
வலிமைகள், அழிதர - அழியவும். மும்மதில் - திரிபுரம் (வெம்மை +
அழல்கொள) பற்றி யெரியவும். நனிமுனிபவர் - மிகவும் கோபிப்பவர். பதி
வீழிமிழலை. தொழுவு இலா- தொழுதல் இல்லாத (நிசிசரர்.)

     5. பொ-ரை: பசிய கண்களையும், சிறு முழக்கத்தையுமுடைய பெரிய
வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர். எல்லா
இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர். தேவர்களால் தொழப்படும்
தன்மையர். தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும்
தொழுது போற்றப்படுபவர். கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: பைங்கண்ணது - பசிய கண்ணை யுடையதாகிய. மழலை -
சிறுமுழக்கத்தைச் செய்கின்ற. பெரு வெள் ஏற்றினர். வெள்ளிய பெரிய
இடபத்தையுடையவர். தருமம் - எவற்றினும்