3730. |
கட்டுர
மதுகொடு கயிலைநன் மலைமலி |
|
கரமுடை
நிட்டுர னுடலொடு நெடுமுடி யொருபது
நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ
வருள்செயும்
சிட்டர்தம் வளநகர் செறிபொழி றழுவிய
சேறையே. 8 |
8.
பொ-ரை: தனது உறுதியான உடல்வலிமை கொண்டு
கயிலைமலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற
கொடியவனான இராவணனின் உடலும், பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர்
சிவபெருமான். அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை
அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர். அவர்
வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கட்டு உரம் (அது) கொடு - தனது உறுதியான உடல்
வலிமை கொண்டு. கயிலைநல்மலை நிட்டுரன் - நல்ல கயிலை மலைக்குத்
தீங்கு இழைத்தோனாகிய இராவணனது (நல்மலையென்றார். தீங்கு
செய்தோனுக்கும் நன்மைசெய்த கருணை நினைந்து) மலிகரம் உடை
உடலோடு அதிகமான (இருபது) கைகளையுடைய உடம்போடு. நெடும் -
பெரிய. முடியொருபத்தம் நெரிசெய்தார் - தலை பத்தையும் அரைபடும்படி
செய்தருளினார். மட்டு - வாசனையையுடைய. உரம் - வளம் மிக்க. மலர்
அடி - மலர்போலும் திருவடிகளை. (அடியவர் தொழுது எழ அருள்
செய்யும்) சிட்டர் - நல்லியல்புடையவர். சிட்டன் - சிவபெருமானைக்
குறிப்பது. சிட்டனே சிவலோகனே சிறு நாயினுங் கடையாயவெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே
(திருவாசகம். திருக்கழுக்குன்றப் பதிகம்-2.)
|