பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)91. திருவடகுரங்காடுதுறை1105

3781. கறியுமா மிளகொடு கதலியின்
       பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
     தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார்
     நீடுவா னுலகினூடே.                  4


உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை
மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி
உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள்
சிவகதி பெறுவது உறுதி.

     கு-ரை: முழைவளர் - குகைகளின் அருகிலே வளர்ந்த. ஆரமும் -
சந்தனமரங்களையும். முகந்து - வாரி. நுந்தி எத்தும் - தள்ளிமோதும் காவிரி.
மாமத்த மலர் - பெருமை பொருந்திய பொன்னூமத்த மலரொடு. அடிகள்
தம்மேல் - அடிகளிடத்து. சித்தமாம் அடியவர் - சித்தம் வைக்கும் அடியவர்.


     4.பொ-ரை: உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து
தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும்
திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின்
திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து
மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர்.

     கு-ரை: கறியும் - உறைக்கும். மாமிளகு ஒடு - மிக்க மிளகுச்
செடிகளோடு. கறி - கறிப்பு எனவும் வழங்கும். அவரது மலரடிகளைத்
தொழுது எழு எண்ணும் உள்ளக் குறிக்கோளையுடையவர் என்பது, மலரடி...
... குறியினார் என்பதன் பொருள். மிகக் கூடுவார் - என்றும் கூடிவாழ்வார்.