பக்கம் எண் :

1106திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3782. கோடிடைச் சொரிந்ததே னதனொடுங்
       கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப்
     பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா
     ரிடமெனப் பேணினாரே.               5

3783. கோலமா மலரொடு தூபமுஞ்
       சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
     திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
     நினையவல் வினைகள்வீடே.            6


     5. பொ-ரை: மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த
முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில்
விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வட
கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய
சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக்
கொண்டுள்ளார்.

     கு-ரை: கோடு இடை - மரக்கிளைகளில், சொரிந்த தேன். கோட்டிடை
எனற்பாலது கோடிடை என்றாகியது புறனடையாற்கொள்க. கொண்டல் -
மேகம். வாய்விண்ட - பெய்த. முன்நீர் - முதற்பெய்த நீர். “தலைப்பெயல்
தலைஇய தண்ணறுங் கானத்து.” (தி.11 திருமுருகாற்றுப்படை.9) காடு -
சோலை. கடறு -வனம். ஓடு உடை - ஓடிவருதலையுடைய காவிரி.

     6. பொ-ரை: அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான