பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)91. திருவடகுரங்காடுதுறை1107

  * * * * * * * *                       7

3784. நீலமா மணிநிறத் தரக்கனை
       யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார்
     வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே
     யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை
     யடைகுரங் காடுதுறையே.              8


குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி
போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைத்து போற்ற
வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும்.

     கு-ரை: வாலியார் வழிபடப் பொருந்தினார்:- தலப்பெயர்க் காரணங்
கூறியவாறு. அடுத்த பாட்டிலும் இக்குறிப்பு விளக்கப்படுகிறது. ஆலும் -
அசைந்து வருகிற, காவிரி. வல்வினைகள் - எளிதில் நீங்காத கன்மங்கள்.
வீடு - விடுதலையாம். வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர்.

7. * * * * * * *

     8. பொ-ரை: நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை,
இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப்
பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள்
இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள
குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஒல்க - குழைய, “ஒல்கு தீம்பண்டம்” (சீவக சிந்தாமணி - 62)
இராவணனை வாலினாற் கட்டிய வாலியார். இலை - பச்சிலை மரம்.
குறிப்பு:- எட்டாவது பாடல் மண்ணின் மிசை வாழ்வார்கள், பிழைத்தாலும்
வந்தடையிற் கண்ணுதலோன் தன் கருணைக் கைக்கொள்ளும் எனக்
காட்டவருவது. இப்பதிகத்து வாலியின் பெருமையோடு படுத்தி
இராவணனைக் கூறியமை பாராட்டத்தக்கது. வாலியார்:- ஒருவரைக் கூறும்
பன்மைக்கிளவி. (தொல். சொல். சூ-27)