3785. |
பொருந்திறற்
பெருங்கைமா வுரித்துமை |
|
யஞ்சவே
யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை யநங்கமா
விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண்
டோங்கிய வடிகளாரே. 9
|
3786. |
கட்டமண்
டேரருங் கடுக்கடின் |
|
கழுக்களுங்
கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி |
பொ-ரை:போர்செய்யும்
தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய
யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி
செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல்
அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப்
பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனம்,
திருமாலும் தம்மைத்தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி
ஒளிர்ந்த தலைவராவார்.
கு-ரை:
பெருந்திறத்து அநங்கன்; உடல் இன்றியே பெரிதும் வருத்தும்
தன்மை பெருந்திறம் என்னப்பட்டது. அநங்கனை - மன்மதனை. அந்
அங்கமா - உடம்பு இல்லாதவாறு. அநங்கன் - வாளாபெயராய் நின்றது.
அருந் திறத்து - அரிய வலியையுடைய. இருவரை - பிரம விட்டுணுக்களை.
அல்லல் கண்டு - துன்புறச் செய்து. ஓங்கிய - அழலாய் ஓங்கிய.
வடகுரங்காடுதுறையடிகளார் அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை
போலும் என்க.
10.
பொ-ரை: கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான
கட்டுப்பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக்
கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத்
தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
|