|
எட்டுமா
காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமாமே. 10 |
3787. |
தாழிளங்
காவிரி வடகரை |
|
யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியா னருமறை ஞானசம்
பந்தன கருதுபாடல்
கோழையா வழைப்பினுங் கூடுவார்
நீடுவா னுலகினூடே. 11 |
திருச்சிற்றம்பலம்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சீலமிக்க சிவபெருமானின்
திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.
கு-ரை:
கட்டு - கட்டுப்பாட்டையுடைய. அமண் (உம்) தேரரும் -
அமணரும், புத்தரும். அமண்:- தூது, அரசு என்பன போல விகுதி
தொக்குநின்றது. கடுக்கள் தின் - கடுக்காய்களைத் தின்கின்ற. கழுக்கள் -
கழுந்து போல்பவர். கசிவு - மன விரக்கம். பிட்டர் - விலக்கத்தக்கவரும். மயிர்பறித்த
தலையினராதலின் அமணரைக் கழுக்கள் என்றார். பிட்டர் -
பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு. அறவுரை - தர்மோபதேசங்கள்.
கொள்ளலும் - கொள்ளன்மின் (கொள்ளும் உடம்பாடு) எதிர்மறைப் பன்மை
ஏவல் வினைமுற்று. கொள்+அல்+உம்; அல் - எதிர்மறை இடைநிலை. உம் -
ஏவற் பன்மை விகுதி. வரைப் பண்டம் - மலையில் உள்ள பொருள்கள்.
அவை:- முதல் ஐந்து பாடல்களிலும் கூறியவை. உந்தி எட்டும் - தள்ளிப்
பாயும். மா காவிரி இடையுரி வடசொலின் (நன்னூல் சூத். 239) என்னும்
விதிப்படி இயல்பாயிற்று. சிட்டன் - சீலத்தை விரும்புவோன், சிவபிரான்.
சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை. (தி.5.பா.81.பா.1)
11.
பொ-ரை: பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வட
கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்,
பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய
|