பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)92. திருநெல்வேலி1113

கிறிபட நடந்துநற் கிளிமொழி
     யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி
     யுறை செல்வர்தாமே.                  3

3791. காண்டகு மலைமகள் கதிர்நிலா
       முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங்
     காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
     மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி
     யுறை செல்வர்தாமே.                 4


யுடையவனையும் சடைமீது சுற்றி அணிந்து, வெண்மையான திருநீற்றைப் பூசி,
பிறர் மயங்கும் வண்ணம் நடந்து, நல்ல கிளி போலும் இனிமையான
சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை
வசப்படுத்தும் சிவபெருமான், நெருங்கிய சோலைகள் சூழ்ந்த
திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார். அவரை
வழிபடுவீர்களாக.

     கு-ரை: நெறிபடு - தழைத்த. குழலியையும், என உம்மையை விரிக்க.
சுலவி - கலந்தணிந்து; (சுலவி) இகரம் விசையெச்சவிகுதி, கிறி -
விளையாட்டு, பட - பொருந்த, நடந்து - பிச்சைக்குச் சென்று, கிளி
மொழியவர் - தாருகாவனத்து முனிபத்தினியர் முதலியோர், மனம் கவர்வர்
போலும்.

     4. பொ-ரை: நெருங்கிய பெரிய மாடங்களிலும், மாளிகைகளிலும்,
மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திரமண்டலத்தைத் தொட்டு அசைகின்ற
திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான்,
தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால்
புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும், பாம்பை ஆபரணமாக அணிந்து
ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை
விரும்புபவர். அவரை வழிபடுவீர்களாக.