பக்கம் எண் :

1116திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

புக்கதோர் புரிவினர் வரிதரு
     வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                 7

3795. முந்திமா விலங்கலன் றெடுத்தவன்
       முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர
     லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள்
     பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                8


உடைய தலைவர். அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த
திறமையையுடையவர். செவ்வொளி படரும் சடையினர். அவரை
வழிபடுவீர்களாக.

     கு-ரை: அக்கு - அக்குப்பாசி. உலாம் - அசைகின்ற. அரையினர் -
இடுப்பையுடையவர். திரை - (கங்கை) அலைகள். உலாம் - உலாவும். முடியினராகிய அடிகள். தக்கனார் - உயர் சொற்றானே குறிப்பு நிலையால் இழிபு விளக்கிற்று என்பர் சேனாவரையர். (தொல், சொல் 27சூ. உரை.) சாடிய - அழித்த. சதுரனார் - திறமையையுடையவர். கதிர்கொள் செம்மை புக்கது. ஓர் புரிவினர் - செவ்வொளி பொருந்திய சடையை யுடையவர், புரிவு - முறுக்குதலை உடைய சடைக்கு ஆயினமையின் தொழிலாகுபெயர், புரிசடை என வருதலுங் காண்க. வரிதரு - கீற்றுக்களையுடைய வண்டு, முரலுதல் - மூக்கால் ஒலித்தல்.

     8. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற, பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்ந்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நகநுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.