பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)96. திருநெல்வெண்ணெய்1145

3838. நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
  றரக்கனை யசைவுசெய் தீர
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே.                  8

3839. நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
  றிருவரை யிடர்கள் செய்தீரே
இருவரை யிடர்கள் செய்தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே.                  9


     8. பொ-ரை: நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும்
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுப
வரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவ
பெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை
அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.

     கு-ரை: நெருக்கிய - நெருங்கிய என்பதன் வலித்தல் விகாரம்.
அசைவு செய்தீர் - வலிதளரச் செய்தீர்.

     9. பொ-ரை: வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய்,திரு
நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய்,
அன்று திருமாலும், பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச்
செய்த சிவபெருமானே! அவ்வாறு திருமால், பிரமன் என்னும் இருவரைத்
துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும், புறமும் ஒத்து வணங்கிப்
போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர்.

     கு-ரை: இருவரை - பிரம விட்டுணுக்களிருவரையும், இடர்கள்
செய்தீரே - ஆழ்ந்தும் உயர்ந்தும் காணமாட்டாமை, அதனால் என்செய்தும்
என அலமருதல் (தம் செருக்கு நிலைகுலைதல், நாணி நிற்றல், ஆகம்பல
ஆதலின் இடர்கள் எனப்பன்மையாற் கூறினார்.) “ஆழ்ந்து காணார்
உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர், தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்
கிடம் என்பரால்” (தி.2.ப.114.பா.9.) என்னும் திருக்கேதாரப்பதிகத்தால்
ஆறிக.