3862. |
வித்தக
மறையவர் மிழலையு ளீரன்று |
|
புத்தரொ
டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே. 10 |
3863. |
விண்பயில்
பொழிலணி மிழலையு ளீசனைச் |
|
சண்பையுண்
ஞானசம் பந்தன
சண்பையுண் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொரு ளுணர்வது முணர்வே. 11 |
திருச்சிற்றம்பலம்
ஆகுபெயர். அது குன்றொன்றொ
டொன்று (தி.2.ப.88.பா.4) என்னும்
தென்திருமுல்லைவாயிற் பதிகத்தால் அறிக. அமர் - பொருந்திய, சோலை
சூழ்ந்த, மிழலை, (அற்புதன்) அல் - ஐந்து இராத்திரியில். புதன் -
ஞானங்களை வெளிப்படுத்தின திருமால், புதன் - வடசொல். அந்த
மதத்துக்குப் பாஞ்சராத்திரம் அஞ்சலினவர் புகழ் அண்ணல் என்பது.
மகாஸ்காந்தம் என்னும் பெயர் வழங்கும். இனி அற்புதன் என்பதற்கு,
கண்ணிடந்து பூசித்த அரிய செயலையுடையவன் எனலும் ஆம்.
அற்புதனோடு அயனும் அறியாதவனானான். ஒருவினையொடுச் சொல்
நின்றது. நின்றவரே! உமது நல்ல திருவடியை அறிவது - உணர்ந்து ஆர்வம்
தழைப்பதுவே. நயம் மானிடப் பிறவியெய்தினோர் அடையும் பயனாம். நின்ற
அந் நற்பதம் என்க.
10.
பொ-ரை: நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் வாழும்
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும்,
புத்தமும், சமணமும் வீழுமாறு செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு
புத்தமும், சமணமும் வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே
பத்தியுடைய நன்மனம் உடையவர்கள்.
கு-ரை:
பத்திசெய் மனம் உடையோரே உம்மைப் போற்றத்தக்கவர்
என்றது ஈற்றடியின் கருத்து. ஏனையோர் உம்மால் நக்கு நிற்கப்படுவோர்
ஆவர் என்பது குறிப்பு. பொக்கமிக்கவர் பூவு நீரும் கண்டு நக்கு நிறபர்
அவர்தமை நாணியே (தி.5ப.90.பா.9.)
11.
பொ-ரை: ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்தோங்கிய
சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்
|