பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)98. திருவீழிமிழலை1157

3860. விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
  இலங்கைமன் னிடர்கெடுத் தீரே
இலங்கைமன் னிடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.              8

3861. வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
  அற்புத னயனறி யானே
அற்புத னயனறி யாவகைநின்றவ
நற்பத மறிவது நயமே.                      9


அனைவரும் விரும்பிக் கேட்பவர் என்பது ஈற்றடியின் கருத்து. நசை உறும்
- (கேட்போர்) விரும்பும். நாவினர் - பேச்சையுடையவர். நா -
கருவியாகுபெயர்.

     8. பொ-ர: மலைபோன்ற உறுதியான மதிலையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும்,
அன்று இலங்கை மன்னனான இராவணனைக் கயிலையின் கீழ் அடர்த்த
போது, அவன் உம்மைப் போற்றிச் சாமகானம் பாட அவன் துன்பத்தைப்
போக்கியவரும் ஆகிய சிவபெருமானே! அவ்வாறு இலங்கை மன்னனின்
துன்பத்தைப் போக்கிய உம்மைப் போற்றி வணங்குபவர்களே புலன்களை
அடக்கி ஆளும் வல்லமையுடையவர்.

     கு-ரை: விலங்கல் - மலைபோன்ற. ஒள் மதில் - அழகிய மதில். இடர்
கெடுத்தீரே - செருக்கால் அவன் உற்ற துன்பத்தைப் போக்குதற்கு இரங்கி
இடரை அகற்றியருளினீர். வாசனாமலம் தம்மறிவினும் மிக்குப்
புலன்களையீர்த்துச் செல்லுமாகலின், திருவைந்தெழுத்தால் உம்மைத்
துதிப்போர், புலன்களைக் கோபித்து மடக்குவதும் உறுதி. ஏனையோர்க்கு
ஆகாது என்பதாம்.

     9. பொ-ரை: மலைபோன்ற மாளிகைகளும், சோலைகளுமுடைய
அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றவரும், திருமாலும், பிரமனும் அறியாவண்ணம்
நின்றவருமான சிவபெருமானே! அவ்வாறு திருமாலும், பிரமனும்
அறியாவண்ணம் நின்ற உம் நல்ல திருவடிகளை இடையறாது நினைப்பதே
மானிடப் பிறவி எய்தினோர் அடையும் பயனாகும்.

     கு-ரை: வெற்பு - உவமை