பக்கம் எண் :

1156திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3858. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்செனி
  நிறையுற வணிவது நெறியே
நிறையுற வணிகதொர் நெறியுடை யீரும
தரையுற வணிகவன வரவே.                  6

3859. விசையுறு புனல்வயன் மிழலையு ளீரர
  வசையுற வணிவுடை யீரே
அசையுற வணிவுடை யீருமை யறிபவர்
நசையுறு நாவினர் தாமே.                   7


     6. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளியுள்ளவரும்,
மண்டையோட்டால் ஆகிய மாலையை அணிந்துள்ளவருமான
ஆளுகையையுடைய சிவபெருமானே! அவ்வாறு தலை மாலை அணிந்து
ஆளுகை உடைய நீவிர் உமது அரையில் கச்சாகக் கட்டியது அரவமே.

     கு-ரை: செ(ன்)னி நிரை - தலைமாலை. நிரை - வரிசை. வரிசையாகக்
கோத்த மாலையையுணர்த்தலால் பண்பாகுபெயர், மண்டையோட்டைக்
கோத்தணிந்தது. நெறியே - முறையேபோலும், நெறியென்றது அமுது
உண்டும் வானவர் சாவ, விடமுண்டும் சாவான்தான் ஒருவனே எனத்
தெரிவித்தற்கு, உமது அரை உற: அணிவதும் அரவே. அரை நாண்
ஆகவும் கச்சையாகவும், கோவணமாகவும் அணிந்தமையால், அணிவன
எனப் பன்மையாற் கூறினர். அரவு:- (அரவுகள்) பால் பகா அஃறிணைப்
பெயர்.

     7. பொ-ரை: வேகமாக ஓடிப் புனல் வற்றாத நீர்வளம் மிக்க
வயல்களை உடைய திருவீழிமிலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றவரும், அரவம் அசையும்படி ஆபரணமாக
அணிந்துள்ளவருமான சிவபெருமானே! அவ்வாறு அசையும் அரவத்தை
ஆபரணமாக அணிந்துள்ள உம்மை அறிபவர்களே, தாம் கூறுவனவற்றை
அனைவரும் விரும்பிக் கேட்கும்வண்ணம் உண்மைப் பொருளை
உபதேசிக்கும் வல்லுநர் ஆவர்.

     கு-ரை: அரவு அசைஉற அணிவு உடையீர் - பாம்பை அசையும்படி
அணிதலையுடையீர். உம்மை அறிபவரே உண்மைப் பொருளை உபதேசிக்க
வல்லுநர் ஆவர். அவர் கூறுவனவற்றை