3975. |
வள்ள
லிருந்த மலையத னைவலஞ் |
|
செய்தல்
வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெ ழுந்தன்
றெடுத்தோ னுரநெரிய
மெள்ள விரல்வைத்தெ னுள்ளங் கொண்டார்
மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின்மேன்மி தந்த
தோணி புரந்தானே. 8 |
3876. |
வெல்பற
வைக்கொடி மாலு மற்றை |
|
விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய
தாய்ப்ப ணிந்தஞ் |
8.பொ-ரை:
வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும்
வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்
செய்து செல்லலே உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது
திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டு அன்று
திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின் நெஞ்சு
நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக்
கவர்ந்து கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய
காலத்தில் அலைகள் துள்ளி வரவதால் உண்டாகிய ஒலியுடன் கூடிய
வெள்ளத்தின்மேல் மித்ந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:வள்ளல்
- வேண்டுவார் வேண்டுவதே யீவான் (தி. 6 ப. 23.
பா.1.) ஆசைதீரக்கொடுப்பார் என்ற சுருதி வசனத்தாலும் அபுத்தி
பூர்வமாக வில்வம் உதிர்த்தல், அவியும் விளக்கைத் தூண்டல் செய்த
பிராணிகளுக்கும் வாயினூலாற் சித்திரப் பற்தரியற்றிய சிலந்திக்கும்
பேரரசுரிமையளித்தல் ஆகிய புராண வரலாற்றாலும் சிவ
பெருமானொருவனுக்கே வள்ளல் என்னும் பெயர் அமையும் என்க. உரம் -
நெஞ்சு. மெள்ள - மெல்ல லகர ளகர ஒற்றுமை. துள்ஒலி - அலைகள்
துள்ளி வீசுதால் உண்டாகிய ஓசை. மெள்ள விரல் வைத்தமையால் உரம்
நெரிந்தது. சற்றே அழுத்தி யிருப்பின் உடலும் உயிருமே நெரிந்திருக்கும்
என்றபடி. 9.பொ-ரை:கருடக்கொடிடையு திருமாலும், நறுமணமிக்க தாமரை
மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய்
|