பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)101. திருஇராமேச்சுரம்1171

3880. பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே
       புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந்
     திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரு
     மிராமேச் சுரமேய
மறிகிளர் மானம்ழுப் புல்குகையெம்
     மணாளர் செயுஞ்செயலே.              2


நலம்; உயிர்களின் இளைப்பொழித்தற்குச் செய்யும் நன்மை, மயானத்து
ஆடல் மாக சங்காரத்தைக் குறிப்பது. எரி கதிர் முத்தம்;- முத்துத்
தண்மையுடையதாதலின், எரி, ஒளிக்கு மட்டும் கொள்க. இராமேச்சுரம் மேய
விமலர் செயும் செயலாகிய, நாகம் ஆடத் திறைத்து, நரி கதிக்க, எரியேந்தி,
அழல்வாய் நின்று ஆடும் நலத்தைத் தெரிந்துணர்வாதே
‘மெய்ஞ்ஞானிகளாவார்’ என்பது குறிப்பெச்சம். இப்பெருளுக்கு நலமே
என்பதின் ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுதல் பொருத்தமாகும்.

      2.பொ-ரை:வெண்ணிற அலைகள் துள்ளிவீசும் கடலுடைய
இராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இள மான்கன்றையும்,
மழுவையும் ஏந்தியுள்ள சிவபெருமான் புள்ளிகளையுடைய பாம்பை
இடையில் கட்டிக் கொண்டு, பக்கத்திலே சுருண்ட கூந்தலையுடைய
உமாதேவி பாட, அதற்பேற்ப விரலால் தேறித்துப் பண்ணும் யாழ்
முதலியவற்றின் இசை ஒலிக்க, நள்ளிரவில் நடனமாடும் செயலின்
உண்மையைத் தெரிந்து உணர்பவர் மெய்ஞ்ஞானிகளாவர்.

     கு-ரை:பொறி - புள்ளிகள், கிளர் - விளங்குகின்ற, பாம்பு, அரை
ஆர்த்து - இடுப்பிற் (கச்சையாகக்) கட்டி, அயலே - பக்கத்திலே (நின்று)
புரிவோடு உமைபாட அதற்கேற்ப, தெறி(கிளர) - விரலால் தெறித்துப்
பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை, கிளர - ஒலிக்க, தெறி - தெறித்தல்
என்னும் பொருள் தரலால் தொழிற்பெயர், (யாழ்) ஓசைக்கு அயினமை
ஆகுபெயர். எல்லி - இரவு. எறி சிளர் - வீசுதல். மிக்க வெண்திரை. கிளர்
- துள்ளும். மறிமான் - மான் கன்றும் முழு(வும்). புல்கும் - தங்கிய,
கையையுடைய, உமை மணவாளராகிய பெருமான் - எல்லியாடும் திறம்
தெரிந்துணர்வார். இவை இராமேச்சுரம்மேய (உமை) மணவாளன் செய்யும்
செயலே என்பர் என, ஒரு சொல்லெச்சம் வருவித்து முடிவு கூறினும்
அமையும். சதி -