பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)104. திருப்பரிதிநியமம்1191

3905. செற்றெறியுந் திரையார் கலுழிச்
       செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியா தனலாடு நட்ட
     மணியார் தடங்கண்ணி
பெற்றறிவா ரெருதேற வல்ல
     பெருமா னிடம்போலும்
வற்றறியாப் புனல்வாய்ப் புடைய
     வலம்புர நன்னகரே.                   5


பொருளாகக் கொள்ளாது, தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த
சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள்.
பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்
படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம்
தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும்
நன்னகராகும்.

     கு-ரை: ஊன் அமர் ஆக்கை உடம்பு - தசை முதலியவற்றை
வைத்துக் கட்டப்பட்டதாகிய உடம்பு. அமர் - அமர்த்தியெனப் பகுதியே
வினையெச்சப் பொருள் தந்தது, "அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி"
(தி. 11 திருமுருகாற்றுப் படை. அடி. 58) என்பதுபோல, "குடி பொன்றி"
(குறள். 171) போல, பிறவினை விகுதியும் தொக்கு நின்றது. சிறு காலை -
இளவயதிலேயே உடம்பு தன்னை யுணரில் அது பொருள் அன்று
எனலறியலாகும். ஆதலின் அதனைப் பேணுதலையே பொருளாகக்
கொள்ளாது, அதனைக் கொன்றையினான் அடிக்கே செலுத்திச் சிறுகாலை
ஏத்துமின் என்றவாறு. அவ்வாறு அவனை ஏத்துதற்கு உரியவிடம் அவன்
இருந்த வலம்புர நன்னகராம் என்க

     5. பொ-ரை: கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை
நதியினை, ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த
சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர். அழகு
பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக்
கொண்டவர். இடபத்தை வாகனமாக ஏற்றவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடம், வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய
திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.