|
கருடரு
கண்டத்தெங் கயிலையாரும்
அருளனா ரூராதி யானைக்காவே. 4 |
3971. |
மதுசூதன்
நான்முகன் வணங்கரியார் |
|
மதியது
சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியனா ரூராதி யானைக்காவே. 5 |
வாகனத்தில் விளங்குகின்ற
திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய
திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே
ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர்.
கு-ரை:
அரி அயனோர் காணார் - திருமால், பிரமன் முதலியோரால்
காணப்படாதவராகிய. காணார் - செயப்படு பொருள் விகுதி குன்றிய
முற்றெச்சம். வெருள் விடை - பகைவர் அஞ்சத்தக்க விடை, கருள்தரு
கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய. அருளன் - அருளையே
திருமேனியாக உடையவன். உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும்
உருவிறந்த, அருமேனியதுவுங் கண்டோம், அருவுரு ஆனபோது, திருமேனி
உபயம் பெற்றோம் செப்பிய மூன்று நந்தம், கருமேனி கழிக்கவந்த
கருணையின் வடிவு காணே. (சித்தியார். சூத்.1.55.)
5.
பொ-ரை: மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும்,
பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான்.
ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில்
வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமா
தேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர்.
திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மது சூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவனாகிய
திருமால் வணங்கரியார். (வணங்க + அரியார்). மதியது சொல்லிய
மயேந்திரரும் - ஆகமங்களை உபதேசித்தருளிய மகேந்திர மலையில்
எழுந்தருளியிருப்பவரும். அது மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன
வாகமந் தோற்றுவித் தருளியும் (திருவாசகம் கீர்த்தித் திருவககல். அடி
9 - 10.) கதிர் முலை புல்கிய -
|