|
அங்கணானடி
தங்கையாற்றொழத்
தங்குமோ வினையே. 4 |
3982. |
காணியொண்பொருட்
கற்றவர்க்கீகை |
|
யுடைமையோரவர்
காதல்செய்யுநற்
றோணிவண்புரத் தாணியென்பவர்
தூமதி யினரே. 5 |
3983. |
ஏந்தராவெதிர்
வாய்ந்தநுண்ணிடைப் |
|
பூந்தணோதியாள்
சேர்ந்தபங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற்
சேர்ந்திரா வினையே. 6 |
புகழுடன் விளங்கும்
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான்
திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா.
கு-ரை:
துங்கம் - உயர்வு. பங்கம் ஆ - துன்புறும்படி. அடும் -
கொன்று தோலை உரித்த. நிகழ் - பொருந்திய. வெங்குருத்திகழ் அங்கணான்
- வெங்குரு என்னும் தலத்தில் விளங்குகின்ற சிவபெருமானது.
5.பொ-ரை:
நிலங்களையும், அறவழியில் ஈட்டிய பொருள்களையும்
கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற
திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற
ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத்
துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர்.
கு-ரை:
காணி - நிலங்களையும். ஒண்பொருள் - நல் வழியால்
ஈட்டிய பொருள்களையும், புலவர்களுக்குக் கொடை கொடுக்கும்
தன்மையுடையோர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணி புரத்தின்கண் அரிய
பொருளாய் இருப்பவனே என்று துதிப்போர் தூய சிவஞானம் படைப்பர்
என்பது ஈற்றுப் பகுதியின் பொழிப்பு. ஆணி என்பதற்கு இரண்டாம்
பாட்டில் உரைத்தது உரைக்க. 6.பொ-ரை: படம் விரிக்கும் பாம்பிற்கு
ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த
கூந்தலையுடைய
|