பக்கம் எண் :

1248திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3984. சுரபுரத்தினைத் துயர்செய்தாரகன்
       துஞ்சவெஞ்சினக் காளியைத்தருஞ்
சிரபுரத்துளா னென்னவல்லவர்
     சித்திபெற் றவரே.                     7

3985. உறவுமாகியற் றவர்களுக்குமா
       நெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப்
புறவமாநகர்க் கிறைவனேயெனத்
     தெறகிலா வினையே.                   8


உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் தொழும் மக்கள்மேல் பிணி
முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும்.

     கு-ரை: ஏந்து - படம் விரிக்கும். அரா எதிர் - பாம்பிற்கு ஒப்பு.
வாய்ந்த - பொருந்திய. நுண்ணிடை - சிற்றிடையையும். பூ - பூவையணிந்த.
தண் - குளிர்ந்த. ஓதியாள் - கூந்தலையும் உடைய அம்பிகை. வினை -
பிணி முதலிய துன்பங்கள். மேனிமேல் சேர்ந்திரா - உடம்பைப்பற்றி நில்லா,
விலகிவிடும் என்பது.

     7.பொ-ரை: தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக்
கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத்
தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப்
போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர்.

     கு-ரை: சுரபுரத்தினை - தேவருலகை. துயர்செய் - துன்புறுத்திய
(தாரகன்) அசுரர்களுக்குப் பற்றுக் கோடாயிருந்த மகிடாசுரன் ஒழியத்
துர்க்கையை அம்பிகையின் அம்சத்தினின்றும் தோற்றுவித்தருளிய,
சிரபுரத்திலுள்ள சிவன் என்ன அட்டமா சித்திகளும் கைகூடும். புரம் -
இங்கு உலகு என்னும் பொருளில் வந்தது. 8.பொ-ரை: வறியவர்கட்கு
உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்
செய்கின்ற, இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்
புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந்