3986. |
பண்புசேரிலங்
கைக்குநாதனன் |
|
முடிகள்பத்தையுங்
கெடநெரித்தவன்
சண்பையாதியைத் தொழுமவர்களைச்
சாதியா வினையே. 9 |
3987. |
ஆழியங்கையிற்
கொண்டமாலய |
|
னறிவொணாததோர்
வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுணாமமே
கற்றல்நற் றவமே. 10 |
தருளுகின்ற சிவபெருமானே
என்று போற்றி வணங்குபவர்களை வினைகள்
துன்பம் செய்யா.
கு-ரை:
அற்றவர்க்கு - வறியோர்க்கு. உறவும் ஆகி - (தம் செல்வப்
பெருக்கைக் கருதாது) உறவினர்போல ஆகியும். மாநெதி கொடுத்து - மிக்க
செல்வத்தைக் கொடுத்து. நீள்புவி இலங்குசீர் - (இவ்வாறு உதவி புரிந்து
வரும் தன்மையால்.) நெடிய பூமி முழுதும் புகழ் விளங்கும், புறவமாநகர்.
தெறகிலா வினை - அழிக்க வந்த வினை (தாம், அழிந்துவிடும்).
9.
பொ-ரை: பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான
இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த, திருச்சண்பை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத்
தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம்.
கு-ரை:
பண்புசேர் இலங்கைக்கு நாதன் என்றது - எழில் செய்
கூகை (சிந்தாமணி.102) போலக் கொள்க. சாதியா - துன்புறுத்தா.
10.
பொ-ரை: சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும்,
பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும்,
சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவ
பெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும்.
கு-ரை:
கடவுள் நாமமே கற்றல் நல்தவம் - கடவுளின் புகழைக்
கற்றலே நல்ல தவமாகும்.
|