3999. |
புத்தர்கைச்சமண்
பித்தர்பொய்க்குவை |
|
வைத்தவித்தகன்
மிழலைமாநகர்
சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண்
மெய்த்தவத் தவரே. 10 |
4000. |
சந்தமார்பொழின்
மிழலையீசனைச் |
|
சண்பைஞானசம்
பந்தன்வாய்நவில்
பந்தமார்தமிழ் பத்தும்வல்லவர்
பத்தரா குவரே. 11 |
திருச்சிற்றம்பலம்
கடவுளின் திருவடிகளில்.
பூம் புனல் தூவினார் - பூவையும்
நீரையும் தூவினவர்கள். பூம் புனல் - பூவும் நீரும். பூவோடு நீர் கூறுவதை
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு (தி.5.ப.90.பா.9) எனவும், போதொடு
நீர் சுமந்தேத்தி (தி.4.ப.3.பா.1) எனவும் வருவன கண்டு அறிக. நன்று
சேர்பவர் - முத்தி அடைபவர்.
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்க்
குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான
சிவபெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள்
இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.
கு-ரை:
கை - அற்பத்தனத்தை உடைய. சமண் பித்தர் - பித்தர்
ஆகிய சமணர். ஏதம் கொண்டு ஊதியம் போக விடுதலின் பித்தர்
என்பார். பொய்க்குவை வைத்த வித்தகன் - பொய்க் குவியலாகிய
உபதேசங்களைத் தோற்க வைத்த சாமர்த்தியசாலி. வித்தகன் -
ஞானசொரூபர்.
11.
பொ-ரை: சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப்
போற்றி, சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால்
பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பத்தர்கள் ஆவர்.
கு-ரை:
சந்தம் ஆர் பொழில் - சந்தன மரங்கள் நிறைந்த சோலை.
பந்தம் ஆர் தமிழ் - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாயின தமிழ்.
|