பக்கம் எண் :

1254திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3997. இரக்கமிஃறொழி லரக்கனாருட
       னெருக்கினான்மிகு மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ்
     பரக்குநீள் புவியே.                    8

3998. துன்றுபூமகன் பன்றியானவ
       னொன்றுமோர்கிலா மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார்
     நன்றுசேர் பவரே.                     9


சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை
அழிந்துவிடும்.

     கு-ரை: போர் அணாவு - போரை மேற்கொண்ட.

     8. பொ-ரை: இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான
இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த
சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்
மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை ஒருமுகப்படுத்தி
வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.

     கு-ரை: இரக்கமிஃறொழில் (இரக்கம் இல் தொழில்) - “குறில் வழி
லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழியானே”
(நன்னூல். 228) என்பது விதி. சிரக்கொள் பூவென (சிரம்கொள் பூவென) -
தலையில் அணியும் பூவைப்போல. எதுகை நோக்கி சிரக்கொள் என
வலித்தது. ஒருக்கினார் - சிந்தையை ஒருமைப் படுத்தினவர்.

     9. பொ-ரை: இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ
பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
அப்பெருமானின் திருவடிகளை, பூவும், நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி
பெறுவர்.

     கு-ரை: துன்று பூமகன் - (பூ துன்று மகன்) பூவில் வாழும் பிரமன்.
சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று. மிழலையானடி - அக்