பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)111. திருவீழிமிழலை1253

3994. போதகந்தனை யுரிசெய்தோன்புய
       னேர்வரும்பொழின் மிழலைமாநகர்
ஆதரஞ்செய்த வடிகள்பாதம்
     அலாலொர்பற் றிலமே.                5

3995. தக்கன்வேள்வியைச் சாடினார்மணி
       தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை
     நாடொறுங் கெடுமே.                  6

 
3996.. போரணாவுமுப் புரமெரித்தவன்
       பொழில்கள்சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர்
     தீவினை கெடுமே.                    7


     5. பொ-ரை: செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வியினின்றும்
அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான்,
மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிகளைத்தவிர
வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை.

     கு-ரை: போதகம் - யானை. புயல் நேர் வரும் - மேகங்கள் படியும்.
ஆதரம் செய்த அடிகள் - விரும்பித் தங்கிய சிவபெருமான்.

     6. பொ-ரை: சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர்.
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின்
திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது.

     கு-ரை: சாடினார் - மோதி அழித்தார். மணி தொக்க மாளிகை -
இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை. நக்கனார் - ஆடையில்லாதவர்,
தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து.

     7. பொ-ரை: போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட
அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான், சோலைகள்