3992. |
விசையினோடெழு
பசையுநஞ்சினை |
|
யசைவுசெய்தவன்
மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான்
மிசைசெயா வினையே. 3 |
3993. |
வென்றிசேர்கொடி
மூடுமாமதிண் |
|
மிழலைமாநகர்
மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர்
துன்பமொன் றிலரே. 4 |
கு-ரை:
நான் மறை வல்ல வேதியர் மல்குசீர் வளர்மிழலை என்பது
தில்லை மூவாயிரம்; திருவீழிமிழலை ஐந்நூறு; என்னும் பழமொழிப்படி
அந்தணர்கள் மிகுதியைக் குறித்ததாம். ஐந்நூற்று அந்தணர் ஏத்தும்
எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர்வீழி, இவர் நம்மை ஆளுடையாரே (தி.9
திருவிசைப்பா.54) என்று சேந்தனார் கூறுவதுங் கொள்க. வினை ஆசு அறும்
- வினை பற்று அற நீங்கும்.
3.
பொ-ரை: வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை
உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும்
அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது.
கு-ரை:
விசையினொடு எழு - வேகமாகப் பரவிய. பசையும் நஞ்சினை
- பற்றிக் கொல்லும் விடத்தை. அசைவு செய்தவன் - உண்டவன். நசையின்
மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால். மிசை - மிகை; தீங்கு.
4.
பொ-ரை: சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை
மூடும்படி விளங்கும், உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழிலை
என்னும் மாநகர். அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும்
சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத்
துன்பம் சிறிதும் இல்லை.
கு-ரை:
வென்றிசேர் கொடி - வெற்றியினால் எடுத்த கொடிகள். மூடும்
- வானை மூடுகின்ற. மாமதில் - உயர்ந்த மதிலையுடைய. நாடொறும் நின்ற
- என்றும் நிலைபெற்று நின்ற. ஒன்று - ஒரு சிறிதும்.
|