பதிக வரலாறு:
சிரபுரத்து
அந்தணர் மீண்டு சென்ற பின்பு, கவுணியப் பிள்ளையார்,
ஓங்கிய திருநாவுக்கரசரோடும் விரவிப் பெருகிய நண்புகூர மேவி இனிது
உறையும் நாளில் பரவிப் பணிந்து சாத்திய தமிழ்த் தொடைமாலை இத்
திருப்பதிகம்.
ஈரடி
பண்:
பழம்பஞ்சுரம்
ப.தொ.எண்:
369 |
|
பதிகஎண்:
111 |
திருச்சிற்றம்பலம்
3990. |
வேலினேர்தரு
கண்ணினாளுமை |
|
பங்கனங்கணன்
மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினானடிக்
கன்பர்துன் பிலரே.
1 |
3991. |
விளங்குநான்மறை
வல்லவேதியர் |
|
மல்குசீர்வளர்
மிழலையானடி
உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை
யொல்லை யாசறுமே. 2 |
1.
பொ-ரை: வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய கண்களை
உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அழகிய
கண்களையுடைய சிவபெருமான். அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில்
வீற்றிருந்தருளுகின்றார். ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர்.
அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம்
இல்லை.
கு-ரை:
வேலின் நேர்தரு - வேலை ஒத்த.
2.
பொ-ரை: நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள்
வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள்,
அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில்
நீங்கும்.
|