பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)112. திருப்பல்லவனீச்சுரம்1257

4003. பவளமேனியர் திகழுநீற்றினர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               3

4004. பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               4


இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?

     கு-ரை: பட்டம் வீரர் நெற்றியில் அணியும் ஓர் அணிகலன். அது
இராமாயணத்தில் “நுதலணி ஓடையில் பிறங்கும் வீரபட்டிகை” என
வருவதால் அறிக. நட்டம் - திருக்கூத்து.

     3. பொ-ரை: சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர்,
ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப்
பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர்.
இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?

     கு-ரை: பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை உடையவர்.
“வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே” (தி.4.ப.112. பா.1.);
“பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே திருவுடம்பு” (தி.9
திருவிசைப்பா.95.); “பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு” (தி.4. ப.81.
பா.4.) என்பன காண்க.

     4. பொ-ரை: இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர்.
மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை
எத்தகையது என்பதை யார் அறிவார்?

     கு-ரை: பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை உடையவர்.
ஏழன் உருபு, மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை மயக்கம். மொந்தை
- ஒருவகை வாத்தியம்.