பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)114. திருஏகம்பம்1277

4027. முற்றலாமை யணிந்த முதல்வரே
       மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே
     பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே
     வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே
     காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.        4


தேன் பொருந்திய மலர்களை அணிந்துள்ள, உலகைத் தாங்கும்
தூண் போன்ற சிவபெருமான் காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து அருளு கின்றார்.

     கு-ரை: மிலைச்சி - சூடி. வேறு - வேறாகி முன் செல்ல. தும்பை -
தும்புக் கயிற்றை இடபத்துக்குக் கட்டியவனே. தாகம் - விருப்பம். மாசுணம்
- பாம்புகள். மூசுவது - மூடுவது. ஆகமே - உடம்பையே. புள்ளி ஆடை
உடுப்பதும் கத்து - புள்ளியை யுடைய ஆடையாக உடுப்பது கத்துமே. ஊழி
- பிரளய காலத்தில். போன - தனுகரண புவன போகங்கள் அழியப்பெற்ற
உயிர்களை. உடுப்பது - தன்னுள் ஒடுக்கிக் கொள்வது. உகத்தும் - ஒவ்வோர்
உகத்திலும். உடுப்பது - ஒடுக்கிக் கொள்வதென்னும் பொருளில் வந்தது.
கள் உலாம் - தேன் பொருந்திய. மலர் - மலரையணிந்த. கம்பம் -
(உலகைத் தாங்கும்) தூண். சிவபெருமான். இலக்கண நூலார் இதனை
வெளிப்படையென்ப. நடக்கும் மலை யென்பபோல. இருப்பு முதலிற் பெயர்ச்
சொல்லாயும், பின்தொழிற் பெயராயும் பொருளுணர்த்திற்று. கள்... ... கம்பம்
- கரும்பு. ‘ஆனந்தத் தேன் காட்டும் முக்கட்கரும்பு’ (சிதம்பரமும்
மணிக்கோவை. 15) நகர்வளம் குறித்தது இது.

     4. பொ-ரை: சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர்.
வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர். ஒளி பொருந்திய
பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர். பாலாலும், நெய்யாலும்
திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர். வற்றிய மண்டையோட்டைப்
பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர். தேவர்களாலும் ஏனைய
உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர். அவரைப்
போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது. அப்பெருமான்
திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.