பக்கம் எண் :

1278திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4028. வேடனாகி விசையற் கருளியே
       வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே
     யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே
     குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே
     கம்பமாவதி யாவது மும்மதே.          5


     கு-ரை: முற்றல் ஆமை அணிந்த முதல்வர் - ஆமை ஓட்டை
அணிந்த முதல்வர். முதல்வர் - தலைவர். மூரி - வலிய. ஆமை -
ஆனேற்றை. அணிந்த - அழகு செய்து ஏறிய. முதல்வர் - முதலில்
தோன்றியவர். பரிசர் - தன்மை உடையவர். வாள் அரவு - ஒளி
பொருந்திய பாம்பை. பற்றி - பிடித்து. ஆட்டும் - ஆட்டுகின்ற. பரிசர் -
தன்மையுடையவர். ஆட்டும் - அபிடேகம் செய்யப்பெறும். பரிசர் -
பெருமையையுடையவர். இனி வாளரவு ஆட்டும் பரிசர் என்பதற்கு, போர்
வீரர் கையிற் பற்றும் பரிசையைப் போலப் பாம்பைப்பற்றி ஆட்டி வருபவர்
என்ற கருத்தாகவும் கொள்ளலாம். வற்றல் ஓடு - வற்றிய மண்டையோடாகிய.
கலம் - பாத்திரத்தில் பலிதேர்வது (அவர்) பிச்சை யெடுப்பது. வானினோடு
- தேவர் உலகிலுள்ளவர்களுடன். கலம் (ஏனையுலகிலுமுள்ள) கலம் -
சற்பாத்திரங்களாகிய அடியார்கள். தேர்வது - ஆராய்வதும். பலி -
(அவருக்குச் செய்யும்) பூசை முறைகளையேயாம் (பலி - பூசை). கற்றிலா -
(அவரைக்) கல்லாத. மனம் - மனம். கம்பம் இருப்பு (அது) - இருப்புத்
தூண்போன்றது.

     5. பொ-ரை: சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு
அருள்புரிந்தவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர்.
ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர்,
பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது.
வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற
அணிந்தவர். களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை
உணர்தற்கு இனிமையானது. சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம்,
திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு
வீற்றிருந்தருளுகின்றார்.