பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)114. திருஏகம்பம்1279

4029. இரும்புகைக்கொடி தங்கழல் கையதே
       யிமயமாமக டங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே
     யாழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகனட மாடுதல் செய்துமே
     பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே
     காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.       6


     கு-ரை: விசயற்கு - அருச்சுனனுக்கு. அருளி - அருள் செய்தோன்.
நஞ்சு, மிசையால் - உண்டலால். கருளி - (கண்டம்) கறுப்பு அடைந்தவர்.
கருள் - கருமை. ஆடும் பாம்பு அரை ஆர்த்தது உடையது - ஆடும்
பாம்பை அரையில் கச்சாகக் கட்டிய உடையின் மேலது. அஞ்சு பூதமும் -
ஐம்பூத முதலிய தத்துவங்களாலும். ஆர்த்தது - பிணைக்கப்பட்டதாகிய
இவ்வுலகம். துடையது - அவரால் அழிக்கப்பட்டது என்றது உலகிற்குச்
சங்கார கருத்தா சிவன் என்பது. கோடு வான்மதி - வளைந்த ஆகாயத்தில்
வருகின்ற பிறையாகிய. கண்ணி - தலைமாலை. அழகிது - அழகியதாக
உள்ளது. குற்றம் இல் - களங்கமில்லாத மதி - மெய்யடியார்களின். மதி -
அன்போடு கூடிய அறிவால் வீசும். கண்ணி வலையானது, அழகிது -
உணர்தற்கு இனிமையானது என்றது. “பத்தி வலையிற் படுவோன்” என்ற
கருத்து. காடுவாழ் பதியாவதும் உம்மதே - சுடு காட்டில் வாழ்வது உமது
இருப்பிடமானால். கம்பமாபதி ஆவது உம்மதே - காஞ்சிபுரமாகிய சிறந்த
நகரமும் உம்முடையது என்று சொல்லலாகுமா? என்றது.

     6. பொ-ரை: இறைவர் கொடி போன்று பெரிய புகையுடன் எழும்
நெருப்பைக் கையிலேந்தியவர். இமயமலையரசனின் மகளான உமாதேவியின்
கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன. அடியவர்களால்
பூசிக்கப்படும் அரும்புகளையும், மலர்களையும் பாரமாகத் தாங்குபவர்.
சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச்
சுமப்பவர். பகலில் திருநடனம் செய்பவர். தாருகாவனத்து முனிபத்தினிகளின்
மனம் வாடச் செய்பவர். கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக்
காணப்படும் திருக்கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுபவர்.

     கு-ரை: இரும் - பெரிய (புகைக்கொடி தங்கு). அழல் - நெருப்பு.
கையது - கையின் கண்ணது. தம்கழல் - தமது திருவடி. இமய