|
சேணினோடு
கீழூழி திரிந்துமே
சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றன ருற்றது கம்பமே
கடவுணீயிட முற்றது கம்பமே. 9 |
4033. |
ஓருடம்பினை
யீருரு வாகவே |
|
யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே
யாற்றவெய்தற் கரிது பெரிதுமே |
காண்பான் சென்ற
பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும்,
திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும், கீழ்மைத்
தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும்
அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே. பரம்
பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்கச்சியேகம்பமே ஆகும்.
கு-ரை:
தூணி - அம்பறாத் தூணியாகிய நெற்றி விழியினின்றும். ஆன
- தோன்றிய. சுடர்விடு - ஒளிவீசும். சோதி - அக்கினிப் பொறிகள்.
சுத்தமான - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய. சுடர்விடு - ஞானமயமாகிய.
சோதி - முருகக்கடவுளாம். நெற்றிவிழிப்பொறி அம்பாகநின்று காமனை
எரித்தலால் நெற்றிவிழி தூணியாயிற்று. பேணி - தன்வலிமையைப் பாராட்டி.
ஓடு - முடிகாண்பான் சென்ற. பிரமம் - பெரிய. பறவை - பறத்தலை
உடைய, பித்தனான, பிரமப் பறவை - பிரமனாகிய அன்னப்பறவை.
சேணினோடு - ஆகாயத்திலும். (திருமாலாகிய பன்றி) கீழ் - பாதாளத்திலும்.
ஊழி திரிந்து - ஊழிக்காலம் திரிந்து. சித்தமோடு - தங்கள் மனச்
செருக்கோடு. கீழ் - தங்கள் கீழ்மைத் தன்மையும். ஊழி - முறையே. திரிந்து
- மாறுபட்டு. காண நின்றனர் - உம்மைக் காண் நின்ற அவர்கள். உற்றது -
கண்டது. கம்பமே - அக்கினி ஸ்தம்பமாகிய உமது வடிவத்தையே. ஊழ் -
முறை. ஊழ்+இ=ஊழி, முறையையுடையது. வினைமுதற் பொருள் விகுதி.
10.
பொ-ரை: இறைவரே! யானையின் உடம்பினை உரித்ததாகிய
தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர். உம்முடைய
உண்மைத்தன்மை சக்தி, சிவம் என இரண்டு திறந்தது. உமது பாகத்திலுள்ள
அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது. உயிர்கள் ஆன்ம முயற்சியினால்
உம் திருவடிகளை அடைதல் அரிது. புத்தர் s
|