|
தேரரும்மறி
யாது திகைப்பரே
சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுணீயிடங் கொண்டது கம்பமே. 10 |
4034. |
கந்தமார்பொழில்
சூழ்தரு கம்பமே |
|
காதல்செய்பவர்
தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே
யண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே
பாடவல்லவ ராயின பத்துமே. 11 |
திருச்சிற்றம்பலம்
களும் உம்மை அறியாது
திகைப்பர். அவர்கள் அறிவும் தம் நிலைமை
மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர். கருநிறமுடைய
சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர். பரம்பொருளாகிய நீர் விரும்பி
வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே.
கு-ரை:
ஓர் உடம்பினை - யானையின் ஓர் உடம்பை. ஈர் -
உரித்ததாகிய தோல். உரு ஆக - உடம்பில் (போர்வை) ஆகவும். ஈர் -
ஈர்தல், முதனிலைத் தொழிற்பெயர் இங்கு ஆகுபெயர். உன் பொருள் திறம்
- உம்முடைய உண்மைத் தன்மை. ஈர் உரு ஆக - சத்தி சிவம் என்னும்
இரண்டு திறத்தது ஆகவும். ஆரும் - உமது உடம்பில் கலந்த, மெய்தன் -
அம்பிகையின் திருவுடம்பின். கரிது - கரிய நிறம். பெரிது - மிகவும்
ஒளிவாய்ந்தது. ஆற்றல் - ஆன்ம முயற்சியினால், எய்தற்குப் பெரிதும்
அரிது - உம்முடைய திருவடி முற்றிலும் அடைய முடியாதது. தேரரும் -
புத்தரும். சித்தமும் - அவர் அறிவுகளும். மறியா - தம் நிலைமை மாற
மாட்டா. துதி கைப்பர் - ஆதலால் உம்மைத் துதித்தலை வெறுப்பர். ஒரு
கம்பமே - உம்மை நினைத்தாலே ஒரு பெரிய நடுக்கம். மழைத்துளி போல
வந்தீண்டலால் அறிவுகள் எனப்பட்டது.
11.
பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது
திருவேகம்பம் என்னும் திருத்தலம். அதனை விரும்பி வழிபடுபவர்கள்
பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச்
|