பக்கம் எண் :

1288திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4037. காடுநீட துறப்பல கத்தனே
       காதலால்நினை வார்தம கத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவே
     பல்பிணத்தசை நாடிய சிக்கவே
நீடுமாநட மாடவி ருப்பனே
     நின்னடித்தொழ நாளுமி ருப்பனே
ஆடனீள்சடை மேவிய வப்பனே
     யாலவாயினின் மேவிய வப்பனே,        3

4038. பண்டயன்றலை யொன்று மறுத்தியே
       பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே
     தூயவெள்ளெரு தேறியி ருத்தியே


     3. பொ-ரை: இறைவர், பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும்
கர்த்தாவாயிருப்பவர். தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில்
இருப்பவர். பாடுகின்ற பேய், மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர்.
அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர். திரு
வடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர். அசைகின்ற சடைமீது
கங்கையைத் தாங்கியுள்ளவர். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை
அவரே.

     கு-ரை: நீடது - பரவியதாகிய. காடு - சுடுகாடு. பலகத்தனே -
எல்லாவற்றிற்கும் கர்த்தாவாய் இருப்பவனே. அகத்தனே - மனத்தில்
இருப்பவனே. பூதம் - பூதகணங்கள். மசிக்க - குழைவித்து. பல பிணத்தசை
நாடி அசிக்கவே - பலபிணத்தினுடைய சதைகளை விரும்பி உண்ண.
நடமாடவிருப்பன் - திருக்கூத்தாடுதலில் விருப்பமுடையவன். இருப்பான் -
இருப்போன். ஆடல் - அசைதலையுடைய. சடை மேவிய அப்பன் -
சடையில் பொருந்திய தண்ணீரை உடையவன். அப்பன் -
சர்வலோகத்தந்தை.

     4. பொ-ரை: முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர்.
உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர்.
பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர். தூய வெண்ணிற இடபத்தின்
மீது இருப்பீர். மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர்.
அன்பில்லாதவரை இகழ்வீர். தேவர்