பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)115. திருஆலவாய்1289

கண்டுகாமனை வேவ விழித்தியே
     காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே
     யாலவாயினின் மேவிய கண்டனே.       4

4039. சென்றுதாதை யுகுத்தனன் பாலையே
       சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே
     வீழவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால்
     நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே
     யாலவாயர னாகத் தடவியே.           5


     கு-ரை: அறுத்தி - அறுத்தாய். பாதம் ஓதினர் பாவம்மறுத்தி -
பாதத்தைத் துதிப்பவர்களுக்கு பாவம் உண்டு என்பாரை மறுத்து இல்லை
என்று கூறுவாய். இருத்தி - இருக்கச்செய்தவன். ஏறிஇருத்தி - ஏறிஇருப்பாய்.
இருத்தி - முதலது வினையால் அணையும் பெயர். மற்றது வினைமுற்று.
விழித்தி - விழித்துப்பார்த்தாய். காதல் இல்லவர் தம்மை - அன்பு
இல்லாதவர்கள். இழித்தி - கீழ்ப்படச்செய்வாய். அண்டநாயகனே -
தேவர்களுக்குத் தலைவனே. அண்டர் நாயகன் “சிலவிகாரமாம் உயர்திணை”
என்பது விதி. மிகுகண்டனே - குற்றங்களை நீக்குபவன் என்பதில் பண்புப்
பெயர் விகுதியாகிய ஐகாரம் கெட்டது. (“பிழையெல்லாம் தவிரப்பணிப்
பானை” என்றதன் கருத்து.) மேவிய + அகண்டன் - எழுந்தருளியுள்ள
அளவிட முடியாதவன். மேவிய என்னும் பெயரெச்சத்து விகுதி விகாரத்தால்
தொக்கது. “தொட்டனைத்தூறும் மணற்கேணி” - என்ற திருக்குறளிற் போல.

     5. பொ-ரை: தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக்
கவிழ்த்துவிட, புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை
எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று.
ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசார