4041. |
வெய்யவன்பல்
லுகுத்தது குட்டியே |
|
வெங்கண்மாசுணங்
கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே
யன்பினால்நினை வார்க்கருண் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே
வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே
யாலவாயரன் கையது வீணையே. 7 |
பெயர். இரவு, கனவிற்கானது
காலவாகுபெயர். இவ்வரலாறு பெரிய
புராணத்தில் தொண்டர்க்கெல்லாம் மற்றை நாட் கனவில் ஏவ, அருட்
பெரும் பாணனாரை தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு
புக்கார் மாமறை பாடவல்லார் முன்பிருந்து யாழிற்கூடல் முதல்வரைப்
பாடுகின்றார் பாணர் பாடும் சந்தயாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கு
அழியுமென்று சுந்தரப் பலகை முன் நீரிடுமெனத் தொண்டர் இட்டார்
எனக் கூறப்படுகிறது. (தி.12 திருநீலகண்டயாழ்ப் பாண நாயனார் புராணம்
பா.3,4,6.) சேக்கிழார் பெருமான் இப்பதிகத்து ஆறாம்பாடலில் திருஞான சம்
பந்தப் பிள்ளையார் திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் குறித்தனர் என்பதை
திருவியமகத்தினுள்ளும் திரு நீலகண்டப்பாணர்க்கு அருளிய திறமும்
போற்றி என அருளிச் செய்கின்றார். (தி.12 திருஞானசம்பந்தர் புராணம்
பா.870) பாணற்கு - திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு. அருளொடு -
கிருபையோடு. தென்னவன் தேவி - மங்கையர்க்கரசியார்க்கு. அணியை -
மங்கிலியம் முதலிய ஆபரணங்களை, மெல்ல நல்கிய - மெல்லக்
கொடுத்தருளிய என்றது பாண்டி மாதேவியார் தமது பொற்பின் பயிலும்
நெடுமங்கல நாண் பாதுகாத்தும் பையவே செல்க என்று இக்கருத்தைச்
சேக்கிழார் சுவாமிகள் விளக்குகிறார்.
7.
பொ-ரை: சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்து கையால்
குட்டி. அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி.
அவரே தலைவர். அனலில் ஆடும் திருமேனியுடையவர். அன்பால்
நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர். உலகமுய்ய
அன்று அவர் உண்டது விடமே. வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும்
வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே. அவர் பிச்சை
ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும். திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே.
|