பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)115. திருஆலவாய்1293

4042. தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே
       தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்க னிலத்துக் களித்துமே
     வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே
     நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ
     வாலவாயர னுய்த்தது மெய்கொலோ.     8


     கு-ரை: வெய்யவன் - சூரியன். பல் உகுத்தது குட்டி - பல்லை
உதிர்த்தது கையால் குட்டி. கையது - கையில். வெங்கண் - கொடிய.
மாசுணங்குட்டி - பாம்புக்குட்டி. கையது - கையில் இருப்பது. அனலாடிய
மெய்யனே - நெருப்பில் ஆடிய உடம்பை உடையவன். அருள் மெய்யன் -
நிச்சயமாக அருள்பவன். காளம் - விடத்தை. வள்ளல் - கடவுளது. கையது
- கையில் இருப்பது. மேவு கங்காளம் - பொருந்திய எலும்புக் கூடு. ஐயம்
ஏற்பது - பிச்சை எடுப்பதும். வீண் - பயனற்றது.

     8. பொ-ரை: வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது
தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து,
தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து,
இப்பூவுலகில் களித்து நிற்க, தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக்
கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன்
ஆயினன். அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற,
இராவணனின் தலை நெரிய, அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான்.
உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை
முறியச் செய்தது மெய்கொல்? திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே!
பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான
வரலாறு தானோ?

     கு-ரை: தோள்கள் பத்தொடு பத்து மயக்கி - இருபது தோள்
வலிமையையும் சேர்த்து. தேவர் செருக்கை, மயக்கி - மயங்கச்செய்து
(அழித்து) இது திக்குவிசயம்பண்ணின காலத்தின் நிகழ்ச்சி. வந்த - தன்னைக்
தடுக்க வந்த (வந்த - நின்ற என்னும் பொருட்டு) உகளித்து - துள்ளி (உகள்
- பகுதி) உன்மத்தன் - ஒன்றும் தெரியாதவன் ஆகி. நின்விரல் தலையால் -
உமது விரல் நுனியால்.