4047. |
ஓதி
வாயதும் மறைகளே |
|
யுரைப்ப
தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே
பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே
காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா
மிழலை மேவிய வேதியா. 2 |
4048. |
பாடு
கின்றபண் டாரமே |
|
பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே
தொழுத வென்னையுன் மத்தமே |
பலியிட - நான் பிச்சைஇட.
என் இடை - என்னிடத்திற்கு. வம் - வருவீராக.
வம்மின் என்பது வம் என நின்றது. கதுமெனக் கரைந்து வம்மெனக்கூஉய்
என்பது மதுரைக் காஞ்சி. செய்யாய் என்னும் முன்னிலை வினைச் சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே (தொல்காப்பியம். சொல்லதிகாரம
்-450.) நின்றது மிழலையுள்ளும் - நின்றதும் என்பதின் உம்மை அசை. வம்
என்பது ஏவற்பகுதி; பன்மை மனிதர்காள் இங்கே வம்
2.
பொ-ரை: சிவபெருமான் ஓதுவன வேதங்களே. உரைப்பது பிறர்
எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே. திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டது உமாதேவியை. வழிபடுகின்றேன் அவ்வழகிய கோலத்தை.
காதிலே அணிந்திருப்பது கனவிய குழை. அவர் தம்மிடத்து அன்பு
செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர். வீதியிலே மிகுவது வேதஒலி.
வேதங்களை அருளிச் செய்த அப்பெருமான் வீற்றிருந்தருளுவது
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்.
கு-ரை:
மறைகளே - வேதங்களே. மறைகளே - பிறர் எவர்க்கும்
தெரிய அரிய பொருள்கள். மறை - இரகசியம். மாதை - பெண்ணை.
மிகும்மாதை - மிகும் அழகை. குழையர் - குண்டலத்தை உடையவர்.
காதலார் - காதல் செய்யும் பெண்களின். கனம் - மனத்திண்மையை.
3.
பொ-ரை: சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற பண்தாரம்
என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே. பக்தர்கட்கு ஞானக்
கருவூலமாய் விளங்குபவர். அவர் சூடுவது ஊமத்த மலர்.
|