பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)116. திருவீழிமிழலை1301

பாவி யாதுரை மெய்யிலே
     பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே
     மிழலை மேயமுக் கண்ணனே.            5

4051. வாய்ந்த மேனியெரி வண்ணமே
       மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
     கடுநடஞ் செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே
     யும்மிடைக் கள்வ மிரவிலே
வேய்ந்ததும் மிழலை யென்பதே
     விரும்பியே யணிவ தென்பதே.           6


உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு
நேருமோ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது. வலியோனாகிய
திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான்.

     கு-ரை: ஓவிலாது - (மகாசங்கார காலம் வரையும்) ஓயாமல், இடும்
(சக்தியைச் செலுத்தி ஐந்தொழிலையும்) நடத்தும். கரணம் - சிறந்த கரண
பூதராய் இருப்பவரே “யாது சிறந்த காரணம் அது கரணம்” என்பது தருக்க
நூல். கரணம் - (என்னுடைய) மனமுதலிய அகக்கருவிகள். உன்னும் -
உம்மையே நினைக்கும். ஏவு - மன்மதபாணம். சேர்வும் - என்மேல்
தைப்பதும், நின்ஆணையே - உமது ஆணையின்படிதானோ? நின்ன -
உம்முடைய. பொற்றாள் - பொன்போன்ற திருவடிகளை. அருளின் -
அருளினால். நை(தல்)ஏ - துன்புறுதல் எனக்கு நேருமா? நை - நைதல். ஏ
- வினாப் பொருட்டு. இதுவும் தலைவி கூற்று. பாவியது - (உம்மை மனத்துக்)
கருதாது. உரை - உரைப்பன. மெய்இல் - உண்மையில்லாதனவே. இல் -
பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளையுணர்த்திற்று, “பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்” (குறள் 814) என்றதிற் போல. விறல் -
வலியோனாகிய, கண்ணன் - திருமால். உன்அடி - உமதுதிருவடியை.
மெய்யிலே - உண்மையாகவே. மேவினான் - பொருந்தப் பெற்றான்.

     6. பொ-ரை: சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த
வண்ணமுடையது. அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப்