4052. |
அப்பி
யன்றகண் ணயனுமே |
|
யமரர்
கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே
யொண்கையா லமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே
மிழலை யூரும திருக்கையே
செப்புமின் னெருது மேயுமே
சேர்வுமக் கெருது மேயுமே. 7 |
பாடல்களையே. அவரால்
உதைக்கப் பட்டு வீழ்ந்தவன் காலன். அவர்
அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர். அவர் எங்கள்
வீட்டிற்குப் பிச்சை யேற்க வந்தது இரவில். எம் உள்ளம் புகுந்து கவர்ந்தது
இரவில். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும்
திருத்தலமாகும். அவர் விரும்பி அணிவது எலும்பு மாலையே.
கு-ரை:
மேனி, எரிவண்ணம் - தீயின் வண்ணம். பாடுவது - தேவரீர்
பாடுவதும். வண்ணம் - பலவண்ணப் பாடல்களையே. வண்ணம் சந்தம்
இவை தாளத்தோடு பாடற்குரிய இயலிசைப் பாடல்கள். காலன் - யமன்,
கால்களையுடையவன். எம்மிடைப் போந்தது - எங்கள் வீட்டிற்கு வந்தது
இரவில் - பிச்சை யேற்றலை முன்னிட்டு, உம்மிடை - உம்மொடு. இரவில்
- இராக்காலத்தில். கள்வம் - கள்ளத்தனமாகப்புணர்வோம். இடை - உருபு
மயக்கம். (அணிவது) என்பு. (அது) எலும்பு - தலைவிகூற்று.
7.
பொ-ரை: பாற்கடலில், துயிலும் கண்ணுடைய திருமாலும்,
தேவேந்திரனும், பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம்
வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும். மெய்த்தவம்
செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும். திருவீழி மிழலை
என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும். உமக்கென்றுள்ள
விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல்
தகுமோ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள அங்கு வருவதற்கு உமக்கு
எருதும் இருக்குமே.
கு-ரை:
அப்பு - கடலில். இயன்ற - தூங்குகின்ற, கண் -
கண்ணையுடைய. ஐயனும் - திருமாலும். அயனும் - பிரமனும். ஐயன் -
அயன் என வந்தது போலி. அப்பு - ஆகுபெயர். ஒப்பு இல் - ஒப்பு
இல்லாதது. ஒண் - சிறந்த. கையால் - கையினால், அமரர்தரு அதே -
|